இஸ்ரேலும் சிரியாவும் பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. சிரியாவில் உள்ள அபு அல்-துஹூர் விமானப் படைத்தளத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா பாதுகாப்புச் சபையில் உரையாற…
இஸ்ரேலும் சிரியாவும் பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. சிரியாவில் உள்ள அபு அல்-துஹூர் விமானப் படைத்தளத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய அமெரிக்க துணைப் பிரதிநிதி டாமி புரூஸ் இந்த விடயத்த வலியுறுத்தியுள்ளார்.பேச்சுவார்த்தை மற்றும் அமைதியான தீர்வுகளை ஊக்குவிப்பதற்காக இரு நாடுகளுடனும் பிராந்தியத்தின் பிற பங்காளர்களுடனும் அமெரிக்கா தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும் என தெரிவித்துள்ளார். வடமேற்கு சிரியாவில் அலெப்போ அருகே அமைந்துள்ள அபு அல்-துஹூர் தளத்தின் ஓடுபாதை மற்றும் சேமிப்புக் கிடங்குகளை இலக்கு வைத்து, ஆகஸ்ட் 18 அன்று இஸ்ரேலிய போர் விமானங்கள் 8 வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இதில் சிரியாவின் உள்கட்டமைப்புகளுக்குச் சேதம் ஏற்பட்டது. பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து சிரியாவை நீக்க அமெரிக்கா அண்மையில் எடுத்த தீர்மானத்தை டாமி புரூஸ் சுட்டிக்காட்டினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளைத் திறந்துவிடும் எனவும், நாட்டின் மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பெரிதும் உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.












