இந்தியாவில் ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகிலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் கணவர் இளம் தாய் ஒருவரை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பவானிசாகர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த லூர்துகுமார் மற்றும் இந்திரகுமாரி தம்பதி…

இந்தியாவில் ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகிலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் கணவர் இளம் தாய் ஒருவரை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பவானிசாகர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த லூர்துகுமார் மற்றும் இந்திரகுமாரி தம்பதியினரின் மகளான ரெபேக்கா (24), ராமேசுவரத்தைச் சேர்ந்த தொழிலாளி பாகபிரகாஷ் (36) என்பவரை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.மேலதிக விசாரணைஇவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்திற்குப் பின்னர் தம்பதியினர் ராமேசுவரத்தில் வசித்து வந்த நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ரெபேக்கா தனது மூன்று குழந்தைகளுடன் கணவரைப் பிரிந்து, பவானிசாகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை பாகபிரகாஷ் தனது மனைவியைச் சந்திக்க பவானிசாகர் முகாமிற்கு வந்துள்ளார். மீண்டும் தன்னுடன் ராமேசுவரத்திற்கு வந்து குடும்ப வாழ்க்கையைத் தொடருமாறு அவர் கேட்டதாகவும், அதற்கு ரெபேக்கா மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், பாகபிரகாஷ் தன்னிடம் வைத்திருந்த கத்தியால் ரெபேக்காவை பலமுறை குத்தியதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த ரெபேக்கா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அலறல் சத்தம் கேட்டு அங்கு விரைந்த அக்கம்பக்கத்தினர், தப்பிச் செல்ல முயன்ற பாகபிரகாஷை பிடித்து பவானிசாகர் பொலிஸாரஜடம் ஒப்படைத்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், ரெபேக்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், சந்தேகநபரான பாகபிரகாஷை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.