நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் பனிப்பாறை சரிவினால் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அசம்பாவிதத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 633 ஆக அதிகரித்துள்ள நிலையில், இடைநிறுத்தப்பட்டிருந்த மீட்புப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேபாளப் பகுதியில் இதுவரை 62…
நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் பனிப்பாறை சரிவினால் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அசம்பாவிதத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 633 ஆக அதிகரித்துள்ள நிலையில், இடைநிறுத்தப்பட்டிருந்த மீட்புப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேபாளப் பகுதியில் இதுவரை 626 பேர் உயிரிழந்துள்ளதுடன், 517 வெளிநாட்டவர்கள் உட்பட 2,426 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டுப் பேரழிவு மேலாண்மை அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதேவேளை, திபெத் எல்லைப் பகுதியில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 554 பேர் காணாமல் போயுள்ளதாகச் சீன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.இடைநிறுத்தப்பட்டிருந்த மீட்பு பணிகள்..
பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து உருவான புதிய செயற்கைக் குளம் உடையும் என்ற அச்சத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்த தேடுதல் பணிகள், தற்போது ஆபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து சுரங்கப் பாதை மீட்புக் குழுக்கள் உட்பட சிறப்பு உதவிகளை நேபாள அரசாங்கம் கோரியுள்ளது.
இமயமலைப் பகுதியில் சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் இருந்த பனிப்பாறை சரிந்து விழுந்ததில் உருவான இந்த வெள்ளப்பெருக்கு, நேபாளத்தின் பல மாவட்டங்களைச் சூறையாடியுள்ளது.
சேறு மற்றும் சிதைவுகளுக்கு அடியில் பலர் புதையுண்டுள்ளமையால் உயிரிழப்புகள் மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.












