நேர்மையான அரச சேவைக்கான "நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்துதல் "நேர்மையான கலாச்சாரம் - கிளீன் ஶ்ரீலங்கா" தேசிய நேர்மை வாரம் இன்று ஆரம்பம். "நேர்மையான கலாச்சாரம் - கிளீன் ஶ்ரீலங்கா" என்ற தொனிப்பொருளின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய நேர்…
நேர்மையான அரச சேவைக்கான "நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்துதல் "நேர்மையான கலாச்சாரம் - கிளீன் ஶ்ரீலங்கா" தேசிய நேர்மை வாரம் இன்று ஆரம்பம். "நேர்மையான கலாச்சாரம் - கிளீன் ஶ்ரீலங்கா" என்ற தொனிப்பொருளின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய நேர்மை வாரம் இன்று (ஜூலை 27) முதல் ஜூலை 31 வரை முன்னெடுக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாரநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகம் மற்றும் கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சித் திட்டம் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன. அதற்கமைவாக அரச சேவையின் தரம், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தல் ,ஊழலற்ற முன்மாதிரியான நிர்வாக கட்டமைப்பை கட்டியெழுப்புதல் ஆகிய தற்போதைய அரசாங்கத்தின் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி "தேசிய நேர்மை வாரம்" சத்தியப் பிரமாண நிகழ்வுகள் இன்று காலை ஜனாதிபதி அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களிலும் 'தேசிய நேர்மை பிரமாணம்' வழங்குதல் மற்றும் 'நன்னடத்தை விதிகள்' என்பவற்றை வெளியிடுவதன் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேசிய நேர்மை வாரம் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் 8.30 இற்கு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் தலைமையில் மாவட்டச் செயலக வளாகத்தில் மரநடுகை செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. இவ்வாரத்தை பிரகடனப்படுத்துவதன் முக்கிய நோக்கம், நாட்டின் அரச சேவையின் தரம், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதுடன், ஊழலற்ற முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதாகும். இங்கு 'நேர்மை ' (Integrity) என்பது சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு மற்றும் சுய கண்காணிப்புடன், மனசாட்சிக்கு உடன்பட்டு, சரியான, வெளிப்படைத்தன்மை மற்றும் தார்மீக ரீதியில் தனது சேவையை வழங்குவதைக் குறிக்கிறது. அதற்கமைய, இந்த தேசிய நேர்மை வாரம் பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளது: • ஜூலை 27: நிறுவன ரீதியான நேர்மையினை மேம்படுத்தல்.• ஜூலை 28: நிதி, டிஜிட்டல், தொழில்முயற்சி மற்றும் தொழில்நுட்ப ரீதியான நேர்மையினை மேம்படுத்தல்.• ஜூலை 29: ஆன்மீக, தார்மீக, கலாச்சார மற்றும் சமூக ரீதியான நேர்மையினை மேம்படுத்தல்.• ஜூலை 30: செயற்பாட்டு, உட்கட்டமைப்பு, சேவை வழங்கல் மற்றும் உழைப்புசார் நேர்மையை மேம்படுத்தல்.• ஜூலை 31: சுற்றுச்சூழல், வள முகாமைத்துவம், கிராமிய மற்றும் சமூக வலுவூட்டல் நேர்மை மேம்படுத்தல். ஜூலை 31 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அனைத்து அரச மற்றும் அரை அரச நிறுவனங்களிலும் இத்திட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)