கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் நெல் உமிக்குள் சூட்சுமமான முறையில் பாலை மரக்குற்றிகளை மறைத்து யாழ்ப்பாணத்திற்கு கடத்திச் செல்ல முயன்ற லொறியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று பிற்பகல் (28) ம…

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் நெல் உமிக்குள் சூட்சுமமான முறையில் பாலை மரக்குற்றிகளை மறைத்து யாழ்ப்பாணத்திற்கு கடத்திச் செல்ல முயன்ற லொறியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று பிற்பகல் (28) மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போதே இந்த கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

சோதனையின்போது, நெல் உமிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பாலை மரக்குற்றிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட லொறி மற்றும் மரக்குற்றிகளை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம். திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.