Colombo (News 1st) நீண்ட வாரயிறுதி விடுமுறை காரணமாக சொந்த இடங்களுக்கு சென்ற மக்கள் கொழும்புக்கு திரும்புவதற்காக இன்று (30) விசேட போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.மாத்தறை, காலி, கண்டி உள்ளிட்ட மேலும் சில பிரதேசங்களுக்கு விசேட பஸ்கள்…

Colombo (News 1st) நீண்ட வாரயிறுதி விடுமுறை காரணமாக சொந்த இடங்களுக்கு சென்ற மக்கள் கொழும்புக்கு திரும்புவதற்காக இன்று (30) விசேட போக்குவரத்து சேவை  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.மாத்தறை, காலி, கண்டி உள்ளிட்ட மேலும் சில பிரதேசங்களுக்கு விசேட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்தார்.இதற்கமைய குறித்த விசேட போக்குவரத்துத் திட்டம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து பிராந்திய அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இவ்வாறு சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நீண்ட விடுமுறை ஆரம்பிக்கப்பட்ட போது சேவையில் ஈடுபடுத்தப்பட்ட பெருமளவான பஸ்களின் சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்தார்.இவ்வாறு போதைப்பொருள் பயன்படுத்தி பஸ்களை செலுத்தும் சாரதிகள் தொடர்பில் அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைவர் தெரிவித்தார்.இதேவேளை ரயில்வே திணைக்களமும் இன்று (30) அனுராதபுரத்திலிருந்து மாத்தறை வரை விசேட ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக ரயில்வே ஊடகப் பேச்சாளர் அஸங்க சமரசிங்க தெரிவித்தார்.