நீண்ட விடுமுறை முடிவடைந்துள்ள நிலையில், வெளிமாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தொடருந்து திணைக்களம் ஆகியவை இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகளை ஆரம்பித்துள்ளன. மாத்தறை, காலி மற்றும் கண்டி உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளி…
நீண்ட விடுமுறை முடிவடைந்துள்ள நிலையில், வெளிமாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தொடருந்து திணைக்களம் ஆகியவை இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகளை ஆரம்பித்துள்ளன.
மாத்தறை, காலி மற்றும் கண்டி உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் இருந்து கொழும்பிற்கு திரும்பும் பயணிகளின் தேவையை கருத்திற் கொண்டு மேலதிக பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார்.சட்ட நடவடிக்கை இதற்கான விசேட ஏற்பாடுகள் குறித்து அனைத்து பிராந்திய அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் வாகனங்களை இயக்கும் பேருந்து சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் எச்சரித்துள்ளார்.
நீண்ட விடுமுறையின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில், கணிசமான எண்ணிக்கையிலான பேருந்து சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது தெரியவந்ததை அடுத்து இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, பயணிகளின் வசதிக்காக அநுராதபுரத்தில் இருந்து மாத்தறை வரை இன்று விசேட தொடருந்து சேவையும் இயக்கப்படுவதாக தொடருந்து ஊடகப் பேச்சாளர் அசாங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.



-559760_850x460.jpg)
-559761_850x460.jpg)
-559763_850x460.jpg)


-559754_850x460.jpg)



