நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம், மத்திய அரசுடன் நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவுக்கு வந்ததாக காக்ரோச் ஜனதா கட்சியினர் தெரிவித்துள்ளனர். நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வித்துற…
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம், மத்திய அரசுடன் நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவுக்கு வந்ததாக காக்ரோச் ஜனதா கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவி விலகுவதாக அறிவிக்கப்பட்டது.அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்களான ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் காக்ரோச் ஜனதா கட்சியினர் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இருதரப்பினரும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், நான்கு வாரங்களுக்குள் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.நீட் வினாத்தாள் கசிவு இதையடுத்து, நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக நடைபெற்று வந்த போராட்டத்தை முடித்துக் கொள்வதாக காக்ரோச் ஜனதா கட்சியினர் அறிவித்தனர்.
இதேவேளை, நீட் தேர்வு விவகாரத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, "அது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை" என தெரிவித்தார்.







-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)
-558066_850x460.jpg)
