நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு நல்ல நோக்கத்தில் மேற்கொள்ளப்படுகின்றதா என ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான சாலிய பிரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார். நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பானது ஏற்புடையது அல்ல என அவர் தெரிவித்…
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு நல்ல நோக்கத்தில் மேற்கொள்ளப்படுகின்றதா என ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான சாலிய பிரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார். நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பானது ஏற்புடையது அல்ல என அவர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் ஆயுட்காலத்தை கருத்தில் கொண்டு வயதெல்லை நீடிக்கப்படுமாயின் அரச சேவையின் ஏனைய துறைகளிலும் ஓய்வு பெறும் வயதெல்லை உயர்த்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தெரிவு செய்யப்பட்ட ஒரு தரப்பினருக்கு மட்டும் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பானது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். அரசாங்கங்களுக்கு கிடைக்கப்பெறும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் பெறும் அரசாங்கங்கள் அதிகார துஷ்பியோகத்தில் ஈடுபட முனைவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஆயுட் காலத்தின் அடிப்படையில் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பினை நிர்ணயம் செய்வதானது அவர்கள் பிறந்த ஆண்டின் ஆயுட்கால அடிப்படையில் தீர்மானிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். கீழ் நீதிமன்றங்களைச் சேர்ந்த நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பினை விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிப்பது பொருத்தமற்றது என சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். பதவி வெற்றிடங்கள் நிலவும் நிலையில் எதற்காக ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிக்கப்படுகின்றது என அவர் மேலம் கேள்வி எழுப்பியுள்ளார்.












