நிலாவெளி கடலில் நீராடச் சென்ற வௌிநாட்டு சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி உயிரிழப்பு திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி கடலில் நீராடச் சென்ற வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் நெதர்லாந்தைச் சேர்ந்த 4…

நிலாவெளி கடலில் நீராடச் சென்ற வௌிநாட்டு சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி கடலில் நீராடச் சென்ற வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் நெதர்லாந்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் நிலாவெளிப் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்தவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குச்சவெளி பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.