நிதியுதவி குறைந்து வருவதன் காரணமாக, வரும் ஆண்டின் இறுதிக்குள் காசா மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் பசியால் வாடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கடுமையாக எச்சரித்துள்ளது. காசாவில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் முற்றிலும் சர்வதேச மனிதநேய உதவிகளையே நம்பி வாழ்க…

நிதியுதவி குறைந்து வருவதன் காரணமாக, வரும் ஆண்டின் இறுதிக்குள் காசா மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் பசியால் வாடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கடுமையாக எச்சரித்துள்ளது.

காசாவில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் முற்றிலும் சர்வதேச மனிதநேய உதவிகளையே நம்பி வாழ்கின்றன.நிதியுதவி இருப்பினும், சர்வதேச உதவி நிறுவனங்களுக்கான நிதியுதவி வேகமாக வற்றி வருவதாக அந்த அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. அத்துடன், தொடர்ச்சியான இஸ்ரேலியத் தாக்குதல்களால் அங்குள்ள விவசாய நிலங்களும் வணிக நிறுவனங்களும் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன.

இதனால் அப்பகுதி மக்கள் சொந்தமாக வருமானம் ஈட்டி வாழ்வாதாரத்தைப் பேண முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.