இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே இளைஞரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்துகொண்டதாக வெளியான தகவல், சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள்களான சரோஜ், சாவித்ரி மற்றும் சந்தோஷி ஆகிய மூவரும் ஒரே இளைஞரைத் திருமணம் செய்ய முடிவு…
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே இளைஞரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்துகொண்டதாக வெளியான தகவல், சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
அம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள்களான சரோஜ், சாவித்ரி மற்றும் சந்தோஷி ஆகிய மூவரும் ஒரே இளைஞரைத் திருமணம் செய்ய முடிவுசெய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ள திருமணம் சரோஜ்(20), சாவித்ரி(19), சந்தோஷ் கடக்வன்ஷி(18) ஆகிய மூன்று பெண்களும் தங்களின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர்கள். அவர்களுக்கு கேமராமேனாக கடந்த ஆறு மாதங்களாக பணிபுரிந்து வந்த விகாஸ் என்பவரையே தற்போது அவர்கள் மூவரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதன்படி, அந்த பகுதியில் உள்ள சாமுண்டா கோயிலில் நடைபெற்ற நிகழ்வில் மூன்று சகோதரிகளும் அந்த இளைஞரைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
திருமணச் சடங்குகளின்போது அவர்கள் அக்னியை வலம்வந்ததோடு, ஒருவருக்கொருவர் குங்குமம் வைத்து, பெரியவர்களிடம் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டனர்.
இந்தத் திருமண நிகழ்வின் காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவின. ஆரம்பத்தில் இது சமூக வலைதளப் பதிவிற்காக உருவாக்கப்பட்ட காணொளி எனப் பலர் கருதிய நிலையில், பின்னர் அந்த திருமணம் உண்மையில் நடைபெற்றதுதான் எனச் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.சிறு வயது முதலே நாங்கள் மூவரும் சகோதரிகளாகவும், தோழிகளாகவும் இருக்கிறோம். பெற்றோர் பார்த்த யாரையோ திருமணம் செய்து கொண்டு எங்களால் பிரிந்து வாழ முடியாது.
அதனால்தான் நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து முடிவெடுத்து விகாசை திருமணம் செய்து கொண்டோம்’ என அந்த பெண்கள் சொல்லியிருக்கிறார்கள் இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்துச் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களும் காரசார விவாதங்களும் எழுந்துள்ளன.







-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)
-558066_850x460.jpg)
