பாணந்துறை கடற்கரையில் குளிப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜெல்லிமீன்கள் உடலில் பட்டதன் காரணமாக பாணந்துறை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த சுமார் 10 பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் நான்கு சிறு குழந்தைக…

பாணந்துறை கடற்கரையில் குளிப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜெல்லிமீன்கள் உடலில் பட்டதன் காரணமாக பாணந்துறை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த சுமார் 10 பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் நான்கு சிறு குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாணந்துறை கடற்கரையில் சிறிய அளவிலான சுமார் 300 ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்கியுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை (26/07/2026) விடுமுறை தினத்தன்று குளித்துக் கொண்டிருந்தவர்கள் அந்த ஜெல்லிமீன்கள் தொட்டதால் காயமடைந்துள்ளனர்.