நுவரெலியா மாவட்டம், வலப்பனை ஹரஸ்பெத்த, கல்தெகபத்தன வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீ காரணமாக இதுவரை 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்பகுதியில் நிலவும் தீவிரமான உஷ்ணம் மற்றும் வறண்ட காலநிலை காரணமாகத் தீ மிகவ…
நுவரெலியா மாவட்டம், வலப்பனை ஹரஸ்பெத்த, கல்தெகபத்தன வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீ காரணமாக இதுவரை 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்பகுதியில் நிலவும் தீவிரமான உஷ்ணம் மற்றும் வறண்ட காலநிலை காரணமாகத் தீ மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர், அதிரடிப்படையினர், இராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் ஒன்றிணைந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும், தீயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதனை முழுமையாகக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணிகளுக்குப் பொதுமக்களின் உதவிகளையும் வனத்துறையினர் கோரியுள்ளனர்.
மஸ்கெலியா நிருபர்.







-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)
-558066_850x460.jpg)
