மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காகவே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது பதவி விலகல் தொடர்பான அறிவிப்புக்களை வெளியிட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.நேற்றையதினம்(16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவா…
மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காகவே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது பதவி விலகல் தொடர்பான அறிவிப்புக்களை வெளியிட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.நேற்றையதினம்(16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுர குமார தலைமையிலான அரசாங்கம், தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததன் ஊடாக 14 ஆயிரம் மில்லியன் ரூபா இழப்பைச் சந்தித்துள்ளது. அனுதாபம் இல்லை.. அத்துடன், சட்டவிரோதமான முறையில் சுமார் 300 கொள்கலன்களை நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதுடன், திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை தவறாக பயன்படுத்தியிருக்கின்றது. மக்களின் வாழ்க்கைச் சுமையை அதிகரித்து, பொய்யான மற்றும் கற்பனையான விடயங்களைக் கூறி மக்களை தவறான பாதையில் வழிநடத்தியுள்ளது. எனவே, இவற்றில் இருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு மக்களின் அனுதாபத்திற்காக ஜனாதிபதி தான் பதவி விலகுவது போன்ற கதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளார். எனினும், ஜனாதிபதிக்கு மக்களிடத்தில் இருந்து எவ்வித அனுதாபமும் கிடைக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.












