கொழும்பு துறைமுக நகரில் வைத்து சீனப் பிரஜைகள் குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டு, எஹெலியகொட - கரதன காட்டுப்பகுதியில் கைகால்கள் கட்டப்பட்டுத் தாகப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கபப்டும் சம்பவத்தில் உயிரிழந்தவர், சர்வதேச கணினி குற்றங்கள் மற்றும் இணைய மோசடி வலையமைப்பின்…
கொழும்பு துறைமுக நகரில் வைத்து சீனப் பிரஜைகள் குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டு, எஹெலியகொட - கரதன காட்டுப்பகுதியில் கைகால்கள் கட்டப்பட்டுத் தாகப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கபப்டும் சம்பவத்தில் உயிரிழந்தவர், சர்வதேச கணினி குற்றங்கள் மற்றும் இணைய மோசடி வலையமைப்பின் பிரதானியான "ஹாஃபோங்" (Hao Feng) எனப்படும் சீனக் கோடீஸ்வரர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தச் கொடூரக் கொலையானது சர்வதேச கணினி குற்ற வலையமைப்பைச் சேர்ந்த மாஃபியா கும்பல் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் கண்டறிந்துள்ளனர். கணினி குற்றங்கள் மற்றும் இணைய மோசடிகள் மூலம் சம்பாதிக்கப்பட்ட பல கோடி ரூபாய் பணம் தொடர்பான தகராறே இந்த படுகொலைக்குக் காரணம் என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்த சீனப் பிரஜையை கடத்திச் சென்று படுகொலை செய்த சம்பவத்துடன் சுமார் 20 சீனர்கள் தொடர்புபட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்ய கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவும் எஹெலியகொட பொலிஸாரும் பரந்த அளவிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விசாரணைகளின்படி, குறித்த சீனக் கோடீஸ்வரர் கடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், கொழும்பு துறைமுக நகரின் பாலத்தின் மீது அவருடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரு சீனத் தேசியவாதிகளும் இக்குற்றச்செயலுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் தங்களை அவரது நண்பர்களாகக் காண்பித்துக் கொண்டே அவரைத் துறைமுக நகருக்கு அழைத்து சென்றுள்ளனர். மேற்படி இரு சீனத் தேசியவாதிகளையும் கைது செய்வதற்கான விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. துறைமுக நகரில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில், திட்டமிட்ட சீனக் கும்பலால் கடத்தப்பட்ட இந்தக் கோடீஸ்வரர், எஹெலியகொட - கரதன பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர், அவரது உடலை அப்பகுதியிலுள்ள காட்டுக்குள் கற்களைக் கொண்டு மூடிவிட்டு அக்கும்பல் தப்பிச் சென்றுள்ளது. எஹெலியகொட கரதன பகுதியில் சட்டவிரோத மதுபான முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று, கற்களுக்கு இடையே மனித கை ஒன்று வெளியே தெரிவதைக் கண்டு சோதனை செய்தபோது, அது கடத்தப்பட்ட சீனப் பிரஜையின் சடலம் என அடையாளம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்தே இக்கொலை தொடர்பான பரந்த அளவிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. கொலையாளிகள் நாட்டிலிருந்து தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக, அவர்களுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடையைப் பெறுவதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேவேளை, இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இச்சம்பவம் தொடர்பில் விரைவான மற்றும் முறையான விசாரணைகளை நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், சந்தேக நபர்களான சீனப் பிரஜைகளுக்கு தேவையற்ற இடையூறுகள் ஏற்படாத வகையில் இந்த விசாரணைகளை முன்னெடுக்குமாறும் சீனத் தூதரகம் இலங்கை பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய திட்டமிட்ட கும்பலைச் சேர்ந்த இருவர் ஏற்கனவே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.









-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)