கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சார உடையான ஹிஜாப் தொடர்பான விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இந்த விவகாரம் ஒரு மதப் பிரச்சினையாக மாற்றப்பட்டு, இனங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.…
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சார உடையான ஹிஜாப் தொடர்பான விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இந்த விவகாரம் ஒரு மதப் பிரச்சினையாக மாற்றப்பட்டு, இனங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வைத்தியசாலையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பொதுவான சீருடையையே அணிய வேண்டும் என்பதே விதி எனவும், இது நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை எனவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லா இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டுள்ளார்.
வைத்தியசாலை நிர்வாகத்தின் செயற்பாடு இனவாதத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, அவர் கடுமையான கண்டன அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.
எனினும், இந்த விவகாரத்தை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லா மற்றும் முஜிபுர் ரஹ்மான் போன்ற அரசியல்வாதிகள் பெரிதுபடுத்துவதாகவும், இதனைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேட முற்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதனிடையே, வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினர், ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் இல்லை எனவும், வெளியிலிருந்து சிலர் இந்த விவகாரத்தைத் தூண்டிவிடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பான முழுமையான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் விரிவாகப் பார்க்கலாம்..












