பெல்ஜியத்தின் - ஃப்ளாண்டர்ஸ் பகுதியில் ஒரு வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டின் அடித்தளச் சுவர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் சுமார் 9 மில்லியன் யூரோ (330 கோடி) மதிப்பிலான தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நாணயங்களை கண்ட…

பெல்ஜியத்தின் - ஃப்ளாண்டர்ஸ் பகுதியில் ஒரு வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டின் அடித்தளச் சுவர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் சுமார் 9 மில்லியன் யூரோ (330 கோடி) மதிப்பிலான தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நாணயங்களை கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதிய கழிவுநீர் குழாய்களை அமைப்பதற்காக வீட்டின் அடித்தளத்தில் துளையிடும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே இந்தப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.மேலும், ஃப்ளாண்டர்ஸ், டெண்டர்மாண்டேவில் உள்ள ஒரு முன்னாள் மதுபான ஆலை இருந்த இடத்தில் 18 வயதான கோபி, என்ற சிறுவனே இதனை முதலில் கண்டுப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.உரிமை கோரும் வாய்ப்புஇந்தக் கண்டுபிடிப்பு, தங்கத்தை யார் உரிமை கோர முடியும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.  கட்டுமானப் பணியாளர்களுக்கும், அந்தச் சொத்தை வைத்திருக்கும் உள்ளூர் தொண்டு நிறுவனத்திற்கும் உரிமை கோரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.இது குறித்து அந்நாட்டு காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், மேலும் புதையலைத் தேடி யாரும் அந்த இடத்திற்குச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.அந்த வீடு முழுமையாகச் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து தங்கமும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.