"பிம்சவிய" திட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு "பிம்சவிய" திட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (05.08.2026) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இவ் விழிப்புணர…
"பிம்சவிய" திட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு
"பிம்சவிய" திட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (05.08.2026) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இவ் விழிப்புணர்வு கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த அனைவரையும் வரவேற்று கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் 90% மானவை அரச காணிகள் எனவும் , அவற்றின் உரித்துகள்,பதிவுகள் தொடர்பாக பல்வேறுபட்ட பிரச்சினைகள் காணப்படுவதாகவும் , அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இவ் காணி உரித்துச் சான்றிதழ் வழங்கல் திட்டம் ஒரு சந்தர்ப்பமாக அமையுமென தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இத்திட்டம் செயற்படுத்தப்படுமெனவும் தெரிவித்தார். மேலும் சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதன்முதலாக நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் இவ் பிம்சவிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் காணி உரித்துச் சான்றிதழ் வழங்கல் திட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பாக துறைசார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் விழிப்புணர்வு ஆரம்பிக்கப்ட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து காணி உரித்து நிர்ணய திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அரச மற்றும் தனியார் காணிகளை வேறுபடுத்தி அளவீடு செய்து காணி உரித்து நிர்ணய சான்றிதழ் வழங்குவதே இத்திட்டத்தின் செயற்பாடு எனவும் நில அளவைத் திணைக்களம், காணி உரித்து நிர்ணய திணைக்களம் மற்றும் பதிவாளர் திணைக்களம் ஆகிய மூன்று திணைக்களங்களும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் கிளிநொச்சி மாவட்டத்திற்கான இவ் பிம்சவிய திட்டத்தின் ஊடாக முதற் கட்டமாக அரச காணிகளுக்கு காணி உரித்து சான்றிதழ் வழங்குவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவும் அச்செயற்பாடுகளை கொழும்பில் உள்ள தலைமை அலுவலகம் ஊடாக கண்காணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனியார் காணிகளுக்கான காணி உரித்து சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும், மேலும் அடுத்த கட்டமாக இவ் "பிம்சவிய" வேலைத்திட்டத்தை முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.












