யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையைத் தொடர்ந்து இன்று (27) விசேட மனு (Motion) ஒன்றின் ஊடாக சட்டத்தரணி மூலம் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜரானார். இதன்போது, அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியதுடன், வழக்கை எதிர்வ…
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையைத் தொடர்ந்து இன்று (27) விசேட மனு (Motion) ஒன்றின் ஊடாக சட்டத்தரணி மூலம் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜரானார்.
இதன்போது, அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியதுடன், வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டது.
கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னதாக ஆஜராகாத காரணத்தால், கடந்த 24ஆம் திகதி அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.









-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)