போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸிற்கு(76448) கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் வியாழக்கிழமை(13) மாலை சாய்ந்தமருது பொலி…
போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸிற்கு(76448) கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் வியாழக்கிழமை(13) மாலை சாய்ந்தமருது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே கல்முனைக்குடி கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயது மதிக்கத்தக்க 1 பிள்ளையின் தாயான சந்தேகநபர் கணவனை இழந்த நிலையில், தனது உறவினர்களின் உதவியுடன் நீண்ட காலமாக பல்வேறு போதைப்பொருட்களை விநியோகித்து வந்துள்ளார்.பல மாடிகளுக்கு பாய்ந்து தப்பியோட்டம்குறித்த பெண் பொலிஸாரின் வருகையை அறிந்து கொண்டால் வீட்டுத்திட்ட 3 ஆம் மாடியிலிருந்து பல மாடிகளுக்கு பாய்ந்து சென்று தப்பிச்செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக சந்தேகநபரான பெண் ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) என அழைக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.கைது செய்யபடும் போது அவரிடமிருந்து 2310 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.இருவேறு சந்தர்ப்பங்களில் கைதான சந்தேகநபர் கல்முனை தலைமையக பொலிஸாருக்கு சவாலாக இருந்துள்ளதாக பொலிஸ் உயரதிகாரி குறிப்பிட்டார்.போதைப்பொருட்கள் விநியோகிப்பதாக கிடைத்த தகவலிற்கமைய பெண் பொலிஸாரின் உதவியுடன் மாறுவேடத்தில் பொலிஸார் இவ்விசேட சோதனையினை மேற்கொண்டதுடன், நீண்ட போராட்டத்தின் பின்னர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர். நீண்டகால போதைப்பொருள் விற்பனைஇந்த கைது நடவடிக்கையின் போது பங்கேற்ற பொலிஸாரை பொதுமக்கள் வாழ்த்தியதுடன் நீண்ட கால போதைப்பொருள் விற்பனை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல அவர்களின் மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி அவர்களின் ஆலோசனையிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் அவர்களின் நெறிப்படுத்தலிலும், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வி.பிரகலாதன் தலைமையிலான குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வி.ஜீவரத்தினம், பொலிஸ் உத்தியோகத்தர்களான அதுவார் (91775) நிவேதன்(94680) , பெண் பொலிஸ் உத்தியோகத்தர் சாமிலி(10669) உள்ளிட்ட குழுவினர் இந்த விசேட அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.சந்தேகநபர் உட்பட சான்றுப்பொருட்களை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துவதற்கான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.












