பால் மா, தயிர்ப் பானம் மற்றும் யோகட் உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு “BREAKING NEWS” என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட செய்தியொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விலை அதிகரிப்புகள் தொடர்பான…

பால் மா, தயிர்ப் பானம் மற்றும் யோகட் உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு “BREAKING NEWS” என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட செய்தியொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விலை அதிகரிப்புகள் தொடர்பான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்பதை நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களுக்கு அறிவிக்கிறது. அந்த சமூக ஊடகப் பதிவில் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை ரூ. 260 இனால், தயிர்ப் பானம் ஒரு போத்தலின் விலை ரூ. 40 இனால் மற்றும் ஒரு யோகட்டின் விலை ரூ. 20 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான செய்திகளைப் பார்க்கும்போது, அவற்றை உத்தியோகபூர்வமான அல்லது நம்பகமான தகவல் மூலத்தின் மூலம் உறுதிப்படுத்தாமல் Share செய்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். “Breaking News” என்று குறிப்பிடப்பட்டிருப்பது மட்டும் ஒரு செய்தி உண்மையானது என்பதற்கான ஆதாரம் அல்ல. போலியான அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர்வது நுகர்வோர் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், சந்தையிலும் தவறான புரிதல்களை ஏற்படுத்தக்கூடும். Share செய்வதற்கு முன் Verify செய்யுங்கள். குறித்த தகவல் உத்தியோகபூர்வ அறிவிப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதைச் சரிபாருங்கள். சந்தேகத்திற்கிடமான விலை மாற்றங்கள் அல்லது சந்தை முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் இருப்பின், அலுவலக நேரங்களில் 1977 நுகர்வோர் துரித அழைப்பு இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறிவிக்கவும். 🛑 போலிச் செய்திகளை Share செய்ய வேண்டாம். ✅ தகவல்களை உறுதிப்படுத்துவோம்.🤝 சமூக ஊடகங்களை பொறுப்புடன் பயன்படுத்துவோம்.