ஜந்தர் மந்தரில் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலைத் தொடர்ந்து, 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) தனது போராட்டத்தைக் கைவிட்டதை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை (26) அன்று அங்கு துப்புரவுப் பணிகள் தொடங்கப்பட்டன. மத்திய டெல்லியில் இயல்புநிலை திரும்பியதைத் தொடர்ந்து, புதுடெல்லி மெட்ரோ தனது வழமையான…
ஜந்தர் மந்தரில் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலைத் தொடர்ந்து, 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) தனது போராட்டத்தைக் கைவிட்டதை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை (26) அன்று அங்கு துப்புரவுப் பணிகள் தொடங்கப்பட்டன. மத்திய டெல்லியில் இயல்புநிலை திரும்பியதைத் தொடர்ந்து, புதுடெல்லி மெட்ரோ தனது வழமையான சேவைகளை மீளத் தொடங்கியதுடன், இணைய முடக்கம் நீக்கப்பட்டு, அதிகாரிகளால் தடுப்பு வேலிகளை அகற்றும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன.
மத்திய உள்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதானின் பதவி விலகலைத் தொடர்ந்து, காக்ரோச் ஜனதா கட்சி (CJP) தனது போராட்டத்தைக் கைவிட்டு ஒரு நாளுக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை காலை ஜந்தர் மந்தரில் துப்புரவுப் பணிகள் இடம்பெற்று வந்தன.
போராட்டக் களத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டு, பாதுகாப்புப் பணியாளர்கள் அப்பகுதியைத் தூய்மைப்படுத்தி வருகின்றனர்.
மெட்ரோ சேவைகள் மீட்பு
டெல்லி மெட்ரோ ரயில் கழகம் (DMRC), தனது வலையமைப்பில் உள்ள அனைத்து நிலையங்களும் சாதாரண செயற்பாடுகளை மீளத் தொடங்கியுள்ளதாகவும், பயணிகளுக்காக நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
"சேவை அறிவிப்பு: புதுடெல்லி மெட்ரோ வலையமைப்பின் அனைத்து நிலையங்களும் பயணிகள் சேவைக்காக (நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் இரண்டும்) திறக்கப்பட்டுள்ளன.
ராஜீவ் சவுக், மத்திய செயலகம், மண்டி ஹவுஸ், ஐ.டி.ஓ., டெல்லி, படேல் சவுக், ஜன்பத் மற்றும் லோக் கல்யாண் மார்க் உள்ளிட்ட 18 முக்கிய நிலையங்களில் பல நாட்களாக இருந்த பாதுகாப்புமற்றும் இடைநிறுத்தப்பட்ட மூடல் நடவடிக்கைகள் இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளன. இத்தடைகள் போராட்டத்தின் போது பயணிகள் நடமாட்டத்தைப் பெரிதும் பாதித்திருந்தன.
சி.ஜே.பி. போராட்டம் வாபஸ்
இளைஞர்கள் தலைமையிலான போராட்டத்தின் போது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அதிகாரிகள் நீக்கியதை அடுத்து, ஜந்தர் மந்தர் மற்றும் அதனை ஒட்டிய மத்திய டெல்லி பகுதிகளில் மொபைல் இணையச் சேவைகளும் மீண்டும் வழங்கப்பட்டன.
மத்திய அரசுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் அடிப்படையில், தனது முக்கிய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து, போராட்டம் "நல்லெண்ண அடிப்படையில்" வாபஸ் பெறப்படுவதாக சி.ஜே.பி. சனிக்கிழமை (25) அன்று அறிவித்தது.
"ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றப்படும் என்ற புரிதலுடன், நாங்கள் போராட்டத்தை நல்லெண்ண அடிப்படையில் வாபஸ் பெறுவதாக காக்ரோச் ஜனதா கட்சி அறிவிக்கிறது" என்று சி.ஜே.பி. இன் தலைமைப் பேச்சாளர் சௌரவ் தாஸ் தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த போராட்டங்கள் மற்றும் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிதப்புப் போராட்டம் ஆகியவற்றுக்குப் பிறகு, தர்மேந்திர பிரதானின் பதவி விலகலுடன் இப்போராட்டம் நிறைவுக்கு வந்தது.
சி.ஜே.பி.யின் தகவல்படி, தற்கொலை செய்து கொண்ட நீட் (NEET) மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய நட்டஈடு வழங்குவதாகவும், நாடு முழுவதும் போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை (FIR) வாபஸ் பெறுவதாகவும் மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமனம்
தேர்வுச் சீர்திருத்தங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளின் போது விவாதிக்கப்பட்ட கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், மேலும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பு இஅமைப்பின் ஐந்து அம்சக் கோரிக்கையை பரிசீலிக்கும் என்றும் மத்திய அமைச்சர் ஜே. பி. நட்டா தெரிவித்தார்.
இதற்கமைய, கல்வி அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு பிரகலாத் ஜோஷிக்கு வழங்கப்பட்டுள்ளது.
பொறுப்பேற்றுப் பேசிய ஜோஷி, தனக்கு இந்தப் பொறுப்பை வழங்கியதற்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
"பிரதமர் எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பைக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்... அவரது வழிகாட்டுதலுடனும் தலைமையின் கீழும், இப்பொறுப்பை முழுமையான பணிவுடனும் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றுவேன்" என்று ஜோஷி தெரிவித்துள்ளார்.







-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)
-558066_850x460.jpg)
