பல்கலைக்கழக மாணவர்களில் கணிசமான தொகையினர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பேராசிரியர் அமில இசுரு தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக பாடநெறிகளைக் கைவிட்டு வெளியேறும் ஆண் மாணவர்களில் 70% முதல் 80% வரையிலான பெரும்பான்மையினர் ஏதேனுமொரு போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே என்பது தெரியவந்து…

பல்கலைக்கழக மாணவர்களில் கணிசமான தொகையினர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பேராசிரியர் அமில இசுரு தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக பாடநெறிகளைக் கைவிட்டு வெளியேறும் ஆண் மாணவர்களில் 70% முதல் 80% வரையிலான பெரும்பான்மையினர் ஏதேனுமொரு போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே என்பது தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவது தொடர்பான முழு நாடும் ஒன்றாக தேசிய இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பேராசிரியர் இதனைக் குறிப்பிட்டார்.

நபர்கள் தொடர்ந்து போதைப்பொருளை நாடிச் செல்வது அதிலிருந்து கிடைக்கும் ஏதேனுமொரு மகிழ்ச்சிக்காகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ அல்ல, மாறாக போதைப்பொருள் பயன்பாட்டை நிறுத்தும் போது ஏற்படும் திரும்பப் பெறல் அறிகுறிகளை (withdrawal symptoms) கட்டுப்படுத்துவதற்காகவே ஆகும் என பேராசிரியர் சுட்டிக்காட்டுகின்றார்.

தொடர்ச்சியாக போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் உடலுக்குள் ஏற்படும் இந்தத் திரும்பப் பெறல் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும் தேவை காரணமாகவே மாணவர்கள் உட்பட எந்தவொரு நபரும் தொடர்ந்து போதைப்பொருட்களைப் பயன்படுத்த தூண்டப்படுகிறார்கள் என்றும் அமில இசுரு மேலும் தெரிவித்தார்.

அத்துடன், தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்குவதற்கு கடத்தல்காரர்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் பேராசிரியர் இதன்போது கூறினார்.

மேலும், பாடசாலை அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் மற்றும் பல்கலைக்கழக அமைப்பினுள்ளும் பிள்ளைகள் போதைப்பொருளுக்குப் பழக்கப்படும் மற்றும் அடிமையாகும் அதிக போக்கு காணப்படுவதாக அவர் வலியுறுத்தினார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த பேராசிரியர் அமில அவர்கள்:

"எந்தவொரு நபரும் தொடர்ச்சியாக போதைப்பொருளைப் பயன்படுத்துவது போதைப்பொருளிலிருந்து கிடைக்கும் என்பதாக அவர்கள் கூறும் மகிழ்ச்சிக்காகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ அல்ல.போதைப்பொருள் பயன்பாட்டை நிறுத்தும் போது ஏற்படும் திரும்பப் பெறல் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே அவர்கள் தொடர்ந்து போதைப்பொருளைப் பயன்படுத்துகிறார்கள். இப்போது நமது பல்கலைக்கழகத்தில் தமது பாடநெறியைத் தொடர முடியாமல் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் மாணவர்களை எடுத்துக்கொண்டால், ஆண் மாணவர்களில் 70% முதல் 80% வரையானவர்களுக்கு அந்த நிலைமை ஏற்படுவதற்குக் காரணம் ஏதேனுமொரு போதைப்பொருளுக்கு அடிமையானமையே ஆகும். இலங்கையில் தற்போது நமது பிள்ளைகளை போதைப்பொருளுக்கு அடிமையாக்க இந்த போதைப்பொருள் வியாபாரிகள் பெரும் முயற்சி செய்து வருகின்றனர். பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் பிள்ளைகள் போதைப்பொருளுக்குப் பழக்கப்படுவதில் ஒருவித போக்கு காணப்படுவதைக் காட்டுகின்றன. பல்கலைக்கழகங்களில் உள்ள பிள்ளைகளை போதைப்பொருளுக்குப் பழக்குவதிலும் ஒருவித போக்கு காணப்படுவதை எம்மால் பார்க்க முடிகிறது" எனக் குறிப்பிட்டார்.