வவுனியா, புளியங்குளம் புதூர் சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.அத்துடன் அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.குறித்த விபத்தானது இன்று(25.7.2026) மாலை இ…
வவுனியா, புளியங்குளம் புதூர் சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.அத்துடன் அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.குறித்த விபத்தானது இன்று(25.7.2026) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலதிக விசாரணை விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழில் இருந்து வவுனியா நோக்கி தனது சகோதரியுடன் மோட்டார் சைக்களில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் ஏ9 வீதி புளியங்குளம், புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பிறிதொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட போது குறித்த மோட்டர் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
அவரது சகோதரி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.







-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)
-558066_850x460.jpg)
