புத்தளம் – கொழும்பு வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் சாதாரண மற்றும் சொகுசு தனியார் பேருந்துகள் இன்று (27) காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. கொழும்பு – புத்தளம் நீண்டதூர பேருந்துப் பணியாளர்கள் மீது அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தொடர் தாக்குதல்கள…
புத்தளம் – கொழும்பு வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் சாதாரண மற்றும் சொகுசு தனியார் பேருந்துகள் இன்று (27) காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
கொழும்பு – புத்தளம் நீண்டதூர பேருந்துப் பணியாளர்கள் மீது அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தொடர் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பேருந்து தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜூலை 20, 24, 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் சிலாபம் மற்றும் முந்தல் பகுதிகளில் இந்தத் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் காயமடைந்த பலர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையோ அல்லது தேசிய போக்குவரத்து ஆணையமோ (NTC) இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பேருந்து பணியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக புத்தளம்–கொழும்பு வழித்தடத்தில் பயணிக்கும் பொதுமக்கள் போக்குவரத்து சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.







-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)
-558066_850x460.jpg)
