முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தை பாதுகாக்கும் நோக்கில் மகா சங்க மாநாடு நடத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இடதுசாி மையத்தின் அழைப்பாளர் சமீர பெரேரா இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிறைக்குச் செல்வதனை தடுத்த…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தை பாதுகாக்கும் நோக்கில் மகா சங்க மாநாடு நடத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இடதுசாி மையத்தின் அழைப்பாளர் சமீர பெரேரா இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிறைக்குச் செல்வதனை தடுத்து அவர்களை பாதுகாக்கும் நோக்கில் சில பௌத்தப்பிக்குகள் இந்த சங்க மாநாட்டை நடத்துவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ராஜபக்சகளை காப்பாற்றும் இந்த நாடகத்திற்கு பௌத்தப்பிக்குகளினால் செல்ல முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இந்த மாநாடு பௌத்த மதத்தை பாதுகாக்கும் நோக்கிலோ பௌத்த மதத்தை மேம்படுத்தும் நோக்கிலோ நடத்தப்படுவது அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மாநாடு நாட்டு மக்களினது நாட்டினதோ நலனை கருத்திற் கொண்டு நடத்தவும் இல்லை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார். குற்றச் செயல்கள் கொலைகள் ஊழல்கள் போன்றவற்றை மேற்கொண்ட ராஜபக்ஷ தரப்பினர் சிறைக்குச் செல்வதை தடுக்கும் நோக்கில் இந்த சங்க மாநாடு நடத்தப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். மோசமான ராஜபக்ச தரப்பினரை பாதுகாக்கும் நோக்கில் இந்த மகா சங்க மாநாடு நாடகம் நடத்தப்படுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.