ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாக்க விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக நம்பகமான தகவல் வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்கவுக்கு எதிர்வரும் 30ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு அ…
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாக்க விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக நம்பகமான தகவல் வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்கவுக்கு எதிர்வரும் 30ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பி வைக்கப்படவுள்ளது. விரைவில் கைது 2015 முதல் 2019 வரை, தேசிய லொத்தர் சபையின் மூன்று ஊழியர்களை ரவி கருணநாயக்கவின் தனிப்பட்ட பணியாளர்களாகப் பணியாற்ற சட்டவிரோதமாகப் பணியமர்த்திய குற்றச்சாட்டின் பேரில் வாக்குமூலமொன்றைப் பதிவுசெய்வதற்காகவே அவர் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு அழைக்கப்படவுள்ளார். வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவராக இருந்த சட்டத்தரணி ஷர்மிலா பெரேரா, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழுவின் விசாரணைக்கு முன்னதாக அழைக்கப்பட்டிருந்தார்.நெருக்கமான வட்டாரங்கள்அதன்போது சம்பவம் இது தொடர்பாக வாக்குமூலம் பதிவுசெய்த பின்னர், அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.நீதிமன்றம் அதே நாளில் அவருக்குப் பிணை வழங்கியது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க, மேற்குறித்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்கு அழைக்கப்படவுள்ள நிலையில் அன்றைய தினம் அவரைக் கைது செய்யவும், பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறித்து தற்போது தெரிய வந்துள்ளது.
இந்த முடிவை ஜனாதிபதி அநுர குமார நேற்றுமுன்தினம் இரவு (23) மேற்கொண்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Aanadhi அவரால் எழுதப்பட்டு, 25 July, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.







-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)
-558066_850x460.jpg)
