சீன நாட்டவர் ஒருவருக்குச் சொந்தமான இரண்டு கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட ஐவரை ,தலா 200 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (27) உ…

சீன நாட்டவர் ஒருவருக்குச் சொந்தமான இரண்டு கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட ஐவரை ,தலா 200 இலட்சம் ரூபாய்  சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (27) உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்களின் வெளிநாட்டுப் பயணங்களைத் தடை செய்த நீதிமன்றம், அந்த உத்தரவை உடனடியாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு நீதிமன்ற பதிவாளருக்கும் பணிப்புரை விடுத்தது.

இதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத ஜனதித் உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சீன நாட்டவர் ஒருவருக்குச் சொந்தமான இரண்டு கோடி ரூபாய் பணத்தைப் பறித்துச் சென்றமை தொடர்பில் கொள்ளுப்பிட்டிய காவல்துறையினரால் குறித்த சந்தேக நபர்கள் கடந்த 21ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தியதை அடுத்து, இன்று (27) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.