சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான பகல் நேர பராமரிப்பு நிலையம் ஒன்றை அமைத்தல் தொடர்பான கலந்துரையாடல் சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரின் வழிகாட்டுதலுக்கு அமைவாக கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நடுவூத்து கிராம சேவகர் பிரிவில் பார்வையிட்ட கட்டிடம்…
சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான பகல் நேர பராமரிப்பு நிலையம் ஒன்றை அமைத்தல் தொடர்பான கலந்துரையாடல்
சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரின் வழிகாட்டுதலுக்கு அமைவாக கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நடுவூத்து கிராம சேவகர் பிரிவில் பார்வையிட்ட கட்டிடம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (21) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை சமூக சேவைகள் திணைக்களத்தில் பகல் நேர பராமரிப்பு நிலையம் ஒன்று இல்லாததினால் பராமரிப்பற்ற மாற்றுத்திறனாளிகளை பராமரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் மற்றும் மாற்றுத்திறனாளிகளை வைத்திய குழுவின் உதவியுடன் சரியான முறையில் தெரிவு செய்து இப் பராமரிப்பு நிலையத்தில் உட்புகுத்தல் அவசியம் எனவும் இதன்போது சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டிடத்தினை அமைக்கும் போது அவர்களுக்குரிய வசதிகள் உள்ளடங்களாக அதாவது அரச சுற்றுநிருபத்திற்கு அமைவாக பாதீட்டினை தயாரித்து தரும்படி மேலும் கேட்டுக்கொண்டார். இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், சமூக சேவைகள் மாவட்ட இணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.









-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)