அவுஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அடுத்து, அங்குள்ள 7,56,000 க்கும் அதிகமான பதின்ம வயதினரின் கணக்குகளை நீக்கியுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. சிறுவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்…

அவுஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அடுத்து, அங்குள்ள 7,56,000 க்கும் அதிகமான பதின்ம வயதினரின் கணக்குகளை நீக்கியுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

சிறுவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தடைச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது.

இதற்கமைய, மெட்டா நிறுவனம் மேற்கொண்ட சோதனைகளின் அடிப்படையில், இன்ஸ்டாகிராம் தளத்தில் 4,62,000 கணக்குகளும், பேஸ்புக் தளத்தில் 2,94,000 கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்கம் நடவடிக்கை கணக்குகளின் உரிமையாளர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள், பாடசாலைக் கல்வி குறித்த தகவல்கள் மற்றும் இணையச் செயற்பாடுகள் போன்றவற்றை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் பகுப்பாய்வு செய்தே இந்தக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஒருமுறை கணக்கு நீக்கப்பட்ட பயனர் மீண்டும் புதிய கணக்கை உருவாக்க முனையும் முயற்சிகளும் முடக்கப்பட்டுள்ளன.

சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தத் தவறினால், அதிகபட்ச அபராதத் தொகையை 99 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களாக (சுமார் 69.75 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) உயர்த்த அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய அரசின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக, இளைஞர்களுக்குப் பாதுகாப்பான இணையச் சூழலை உருவாக்கத் தாம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.