தாய்வானில் முன்னெடுக்கப்பட்டு வரும் வருடாந்த ‘ஹான் குவாங்’ இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாகத் தலைநகர் தாய்பேயில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டு, வீதிகள் அமைதியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சீன படையெடுப்பு அபாயத்தை எதிர்கொள்ளும் வகையில் 10 நாட்கள் நடத்தப்…

தாய்வானில் முன்னெடுக்கப்பட்டு வரும் வருடாந்த ‘ஹான் குவாங்’ இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாகத் தலைநகர் தாய்பேயில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டு, வீதிகள் அமைதியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சீன படையெடுப்பு அபாயத்தை எதிர்கொள்ளும் வகையில் 10 நாட்கள் நடத்தப்படும் இந்தப் பயிற்சியின் போது, தாக்குதல் சூழலை செயற்கையாக உருவாக்கிப் பரிசோதிப்பதற்காக மொபைல் இணையச் சேவையின் வேகம் அரசாங்கத்தினால் திட்டமிட்டபடி கட்டுப்படுத்தப்பட்டது.

சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்த இணைய வேகக் கட்டுப்பாட்டின் போது, நிலையான இணைய இணைப்புகள் மற்றும் வைஃபை (Wi-Fi) சேவைகள் தடையின்றி இயங்கின.போலி வான்வழித் தாக்குதல் போலி வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வீதிகளில் பயணித்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், வாகனங்களும் வீதியோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதன்போது, தாய்வான் ஜனாதிபதி லாய் சிங்-தே மற்றும் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வெளிநாட்டுத் தூதுவர்கள் பலரும் அவசர மருத்துவ முகாமாக மாற்றப்பட்ட இடங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விநியோக மையங்களைப் பார்வையிட்டனர். இதேவேளை, சீனாவின் முற்றுகை முயற்சிகளை எதிர்கொள்ளும் வகையில் தாய்வான் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை இணைந்து முதல்முறையாக கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் கூட்டுப் பயிற்சியையும் மேற்கொண்டுள்ளன.

பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் பூகோள அரசியல் மாற்றங்களுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் தாய்வான் பதிலளித்து வருவதாக அதிபர் லாய் சிங்-தே தெரிவித்துள்ளார்.