ஜோதிடத்தில், சூரியனும் சனியும் தந்தை-மகன் என்று குறிப்பிடப்பட்டாலும், இவர்களுக்கிடையிலான உறவு மோதல் நிறைந்ததாகவேக் கருதப்படுகிறது. 'ஷடாஷ்டக யோகம்' என்பது பொதுவாகத் தடைகள், நிதி நெருக்கடிகள், மன அழுத்தம் மற்றும் நடைபெற்று வரும் திட்டங்களில் ஏற்படும் இடையூறுகளுடன் தொடர்புடையதாகக்…

ஜோதிடத்தில், சூரியனும் சனியும் தந்தை-மகன் என்று குறிப்பிடப்பட்டாலும், இவர்களுக்கிடையிலான உறவு மோதல் நிறைந்ததாகவேக் கருதப்படுகிறது. 'ஷடாஷ்டக யோகம்' என்பது பொதுவாகத் தடைகள், நிதி நெருக்கடிகள், மன அழுத்தம் மற்றும் நடைபெற்று வரும் திட்டங்களில் ஏற்படும் இடையூறுகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இந்த கிரக அமைப்பு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிக்காரர்கள் அதிக தடைகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என நாம் இங்கு பார்ப்போம்.மகரம் ஜோதிட சாஸ்திரத்தின்படி, மகர ராசியின் அதிபதியாக சனி பகவான் இருப்பதால், இந்த கிரக அமைப்பானது மகர ராசியில் பிறந்தவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் மகர ராசிக்காரர்கள் தங்கள் பணியில் முழு கவனத்துடன் இருக்கவும், தேவையற்ற நிதி சார்ந்த முடிவுகளைத் தவிர்க்கவும், முக்கியமான பரிவர்த்தனைகளின்போது எச்சரிக்கையுடன் செயல்படவும். அதிக ரிஸ்க் உள்ள முதலீடுகளை இந்த நேரத்தில் தவிர்ப்பது அவசியம்.கும்பம் சனி பகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட கும்ப ராசிக்காரர்களுக்கு, சூரியன் மற்றும் சனி ஆகிய கிரகங்களின் இந்தச் சேர்க்கை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ஒரு காலகட்டமாகக் கருதப்படுகிறது. பணியிடத்தில் கருத்து வேறுபாடுகள், எதிர்பாராத செலவுகள் அல்லது நிதி நெருக்கடி போன்றவை இந்த கிரக மாற்றத்தின்போது பொதுவாக ஏற்படக்கூடிய சவால்களாகக் கருதப்படுகின்றன. இந்த நேரத்தில் அவசரப்பட்டு முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும், மற்றவர்களுக்குக் கடன் கொடுப்பதில் கவனமாக இருக்கவும். வேலை அல்லது பிற காரணங்களுக்காக நீங்கள் வீட்டை விட்டு வெளியே இருக்க வேண்டியிருக்கும், இதனால் குடும்பத்தில் அழுத்தமான சூழல் நிலவும்.