ஜோதிட சாஸ்திரத்தில் கர்மா மற்றும் நீதியின் அதிபதியான சனிபகவான், தற்போது மீன ராசியில் சஞ்சரித்து வருகிறது. ஆகஸ்ட் 20 அன்று சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழையப்போகிறார், மேலும் அக்டோபர் 9 வரை அது நீடிக்கும். ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி புதன் என்பதால், இந்த கிரக நிலை மாற்றம…

ஜோதிட சாஸ்திரத்தில் கர்மா மற்றும் நீதியின் அதிபதியான சனிபகவான், தற்போது மீன ராசியில் சஞ்சரித்து வருகிறது. ஆகஸ்ட் 20 அன்று சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழையப்போகிறார், மேலும் அக்டோபர் 9 வரை அது நீடிக்கும். ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி புதன் என்பதால், இந்த கிரக நிலை மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.அனைத்து ராசிக்காரர்களும் இதன் தாக்கத்தை உணரக்கூடும் என்றாலும், சில ராசிக்காரர்கள் இந்த கிரக மாற்றத்தால் சவாலான காலகட்டத்தை அனுபவிக்கப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.கடகம் சனி ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் போது கடக ராசிக்காரர்கள் அவசரப்பட்டு முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அவசர முடிவுகளால் அவர்கள் பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும், அதே சமயம் பணியிடங்களில் ஏற்படும் உரையாடல்களில் கூடுதல் எச்சரிக்கை தேவைப்படலாம். இந்த காலகட்டம் உங்களுக்கு வாழ்க்கையின் மறுபக்கத்தைக் காட்டலாம். அலுவலகத்தில் உங்கள் மீது அதிக அழுத்தம் கொடுக்கப்படலாம், இது உங்களின் மன அமைதியைக் கெடுக்கும். வியாபரத்தைப் பொறுத்தவரை, இந்த காலகட்டத்தில் எதிர்பார்த்த லாபம் வராமல் இருப்பதுடன் நஷ்டமும் அதிகரிக்கலாம்.கன்னி கன்னி ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர மாற்றத்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறது. முன்னேற்பாடும், சரியான திட்டமும் இல்லாமல் எந்த விஷயத்தையும் தொடங்குவதைத் தவிர்க்கவும், முதலீடுகள் மற்றும் தேவையற்ற செலவினங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். இந்த நேரத்தில் அவர்களின் தொடர்பு திறன்கள் எதிர்மறையாக பாதிக்கப்படலாம். அவர்களின் தொழில் வாழ்க்கையில் புதிய திட்டங்களைத் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

அவர்களின் காதல் வாழ்க்கையில் பல்வேறு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், தங்கள் துணையுடன் சும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.மகரம்மகர ராசிக்குச் சனி பகவான் அதிபதியாக இருப்பதால், இந்த நட்சத்திரப் பெயர்ச்சி அவர்களுக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் மகர ராசிக்காரர்கள் பணியிடத்தில் மோதல்களைத் தவிர்க்கவும், முக்கிய ஆவணங்களைக் கவனமாகக் கையாளவும், குடும்ப உறவுகளில் இணக்கமான சூழலைப் பேண முயற்சிக்க வேண்டும். இந்த நேரத்தில் அவர்கள் நீதிமன்ற வழக்குகளில் தோல்வியை சந்திக்க நேரிடும். அவர்களின் எதிரிகளின் பலம் அதிகரிக்கலாம், அதே நேரத்தில் அவர்கள் சில விபத்துக்களை சந்திக்க நேரிடும். எனவே இந்த காலகட்டத்தில் அவர்கள் கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும்.