அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ், வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 1.75 லட்சத்துக்கும் அதிகமான விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. விசா விதிமுறைகளை மீறியவர்கள், குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள், அமெரிக்க குடிமக்களுக்க…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ், வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 1.75 லட்சத்துக்கும் அதிகமான விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
விசா விதிமுறைகளை மீறியவர்கள், குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள், அமெரிக்க குடிமக்களுக்கு எதிரான வன்முறையை ஆதரித்தவர்கள், மோசடியில் ஈடுபட்டவர்கள், குடியேற்ற முறையை தவறாகப் பயன்படுத்தியவர்கள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்பட்டவர்கள் ஆகியோரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசா ரத்துகள்
பெரும்பாலான விசா ரத்துகள் சட்ட அமலாக்க அமைப்புகளுடனான தொடர்புகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் தாக்குதல், மதுபோதையில் வாகனம் செலுத்துதல், திருட்டு மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் முக்கிய காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், பாலியல் துர்நடத்தை, மனிதக் கடத்தல், குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகப் பதிவுகளை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் உள்ளிட்டோரின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
வட ஆப்பிரிக்காவில் உள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்காவில் குழந்தை பெற்றுக்கொள்வதன் மூலம் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பயணம் செய்ததாகக் கூறப்படும் 100-க்கும் மேற்பட்ட ‘பிறப்புச் சுற்றுலா’ பெற்றோரின் விசாக்களையும் ரத்து செய்துள்ளது.மீண்டும் ட்ரம்ப் கடந்த ஜனவரியில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 1.75 லட்சத்தைக் கடந்துள்ளது.
ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. விசா வழங்கும் நடைமுறையில் சமூக ஊடகக் கண்காணிப்பு மற்றும் விரிவான பின்னணி ஆய்வுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
எனினும், இந்த சமூக ஊடகக் கண்காணிப்பு நடவடிக்கைகள் கருத்துச் சுதந்திரத்தை பாதிப்பதாகவும், குடியேற்றவர்களை குறிவைக்கும் கண்காணிப்பு நடவடிக்கைகளாகவும் இருப்பதாக மனித உரிமை அமைப்புகள் மற்றும் நிபுணர்கள் விமர்சித்துள்ளனர்.












