ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் பொதுநலவாயப் போட்டிகளில் சுப்பர் அதிபாரப் பிரிவில், விதிமுறைகளை மீறி எதிராளியைத் தலையால் முட்டியதால் உகாண்டாவின் குத்துச்சண்டை வீரர் அஜீஸ் அப்துல் போட்டியிலிருந்து மத்தியஸ்தரால் அதிரடியாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.…

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் பொதுநலவாயப் போட்டிகளில் சுப்பர் அதிபாரப் பிரிவில், விதிமுறைகளை மீறி எதிராளியைத் தலையால் முட்டியதால் உகாண்டாவின்  குத்துச்சண்டை வீரர் அஜீஸ் அப்துல் போட்டியிலிருந்து மத்தியஸ்தரால் அதிரடியாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

குத்துச்சண்டை வளையத்தில் நடந்தது என்ன?

போட்டியின் தொடக்கத்தில் இருந்தே அஜீஸ் அப்துல், இங்கிலாந்தின் முன்னாள் உலக இளைஞர் சம்பியனான டமார் தோமஸை எதிர்கொள்ளக் கடுமையான சவாலைச் சந்தித்தார்.

முதல் சுற்று (10-8): 5 அங்குலம் வரை அதிக எட்டும் தூரம் கொண்டிருந்த தோமஸ், அஜீஸை நோக்கி அடித்த துல்லியமான இடது கையிலான குத்துக் காரணமாக அஜீஸுக்கு நிலைதடுமாறாமல் நிற்பதற்காக கொடுக்கப்பட்டது. முதல் சுற்றை மூன்று மத்தியஸ்தர்களும் 10-8 என தோமஸுக்கு சாதகமாகவே வழங்கினர்.

இரண்டாம் சுற்று: சுற்றுகள் நகர நகர அஜீஸ் மிகவும் ஆவேசமாக, எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி குத்துகளை வீசத் தொடங்கினார். முடிந்து விலகும்போதும் தோமஸின் முகத்தில் தொடர்ந்து குத்தியதால், மத்தியஸ்தர் அவருக்கு இரண்டாவது முறையாக புள்ளிகளைக் குறைத்தார்.

மூன்றாவது சுற்று & தகுதியிழப்பு: போட்டியின் முடிவு ஏற்கனவே கைநழுவிப்போன நிலையில், மூன்றாவது சுற்றின் நடுவில் திடீரென தனது தலையை உயர்த்தி தோமஸின் தாடையில் பலமாக முட்டினார் அஜீஸ்.

இதைப் பார்த்த மத்தியஸ்தர் உடனடியாகப் போட்டியை நிறுத்தி, அஜீஸைத் தகுதி நீக்கம் செய்தார். கிளாஸ்கோ மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அஜீஸின் இந்தச் செயலுக்குக் கடுமையாகக் கூச்சலிட்டு எதிர்ப்பைப் பதிவிட்டனர்.

"இது முற்றிலும் அநீதி" – அஜீஸ் கொந்தளிப்பு

போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அஜீஸ், நடுவர்களின் முடிவைக் கடுமையாக விமர்சித்துப் பேசியதாவது:

"இந்த நடுவரின் முடிவு சரியானது அல்ல; இதில் எனக்குக் கொஞ்சமும் உடன்பாடில்லை. இது நிச்சயம் அநீதிதான். இங்கிலாந்து வீரர்கள் பல தவறுகளைச் செய்கிறார்கள். ஆனால் நான் ஒரு கறுப்பின ஆபிரிக்கன் என்பதால் என்னை மட்டுமே இலக்கு வைக்கிறார்கள். இந்த ஆட்டத்தைக் கண்டு அதிகாரிகள் ஏன் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை."

மேலும், "இங்கிலாந்து வீரர் சொந்த நாட்டில் விளையாடுவதால் மத்தியஸ்ர்கள் அவருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள். அவர்தான் என்னை முதலில் தலையினாலும் முழங்கையினாலும் தாக்கினார். அடுத்த முறை அவரை நிச்சயம் வீழ்த்துவேன். 2 ஆண்டுகள், 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் கழித்தானாலும் சரி... அஜீஸ் ரிங்கோ ஒரு உண்மையான வீரன் என்பதை நிருபிப்பேன்" என்று கொந்தளித்தார்.

இடி அமீனின் பின்னணியும், பேரனின் சபதமும்

குத்துச்சண்டை பின்னணி: உகாண்டாவை 1971 முதல் 8 ஆண்டுகள் ஆட்சி செய்து, சுமார் 5,00,000 மக்களின் உயிரிழப்புக்கும், ஆசிய மக்கள் வெளியேற்றத்திற்கும் காரணமாக இருந்த சர்வாதிகாரி இடி அமீன், அதிபராவதற்கு முன்பு ஒரு சிறந்த குத்துச்சண்டை வீரராகத் திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாத்தாவின் பொன்மொழி: "நாட்டிற்கு எதிராக இருக்கும் எதிரியை வீழ்த்த ஒரே வழி அவர்களை நேரடியாக அடித்து வீழ்த்துவது மட்டுமே" என்று இடி அமீன் அன்று கூறிய பொன்மொழியை நினைவு கூர்ந்தே அஜீஸ் இப்போட்டிக்குக் களம் கண்டிருந்தார்.

'ஸ்காட்லாந்து ராஜா': 1976-ல் இடி அமீன் தன்னைத்தானே "ஸ்காட்லாந்தின் ராஜா" என்று அறிவித்துக் கொண்ட சம்பவமே 'தி லாஸ்ட் கிங் ஆஃப் ஸ்காட்லாந்து' என்ற ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படமாக உருவானது.

வீண் சபதம்: தாத்தாவைப் போலவே "ஸ்காட்லாந்தின் புதிய ராஜாவாக மாறுவதே என் இலக்கு" என்ற முழக்கத்துடன் பொதுநலவாயப் போட்டியில் களம் கண்ட அவரது பேரன், இறுதியில் தகுதியிழப்பு செய்யப்பட்டு வெளியேறியுள்ளார்.