இசுட்ராட்ஃபோர்டு-போ (Stratford and Bow) தொகுதியின் லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமரன், வெளியுறவுத் துறையின் இராஜாங்க அமைச்சராகவும் உதவி கொறடாவாகவும் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து Stratford and Bow தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக நீடிப்பார். எனினும்,, வெளி…

இசுட்ராட்ஃபோர்டு-போ (Stratford and Bow) தொகுதியின் லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமரன், வெளியுறவுத் துறையின் இராஜாங்க அமைச்சராகவும் உதவி கொறடாவாகவும் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து Stratford and Bow தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக நீடிப்பார். எனினும்,, வெளியுறவு விவகாரக் குழுவிலிருந்து விலகுவதோடு, எழுத்துப்பூர்வ நாடாளுமன்றக் கேள்விகளைக் கேட்கும் உரிமையையும் இழப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உமா குமரனின் இந்த நியமனம், வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் (FCDO) நாடாளுமன்ற கீழ் செயலாளராகவும் பணியாற்றும் வகையில் அமைந்துள்ளது.

இதற்கான ஒப்புதலை மன்னர் வழங்கியதைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விரிவான அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக இந்த நியமனம் பார்க்கப்படுகின்றது.

போரால் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து, பிரித்தானியாவில் குடியேறிய தமிழ் பெற்றோருக்கு பிறந்த உமா குமரன், கடந்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிட்டுள்ளது.

இதனால், இவர் ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பெண்ணாகவும், ஈழத் தமிழர்களின் சர்வதேசக் குரலாக பார்க்கப்படுகின்றார். இது போன்ற பல தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியின் ஊடாக விரிவாகப் பார்க்கலாம்..