சட்டத்தரணிகள் சங்கம் தங்களுக்கு ஏற்றவாறு நீதிமன்றங்களை கொண்டு செல்வதற்கே முயற்சிக்கின்றன என முன்னனாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.அரசாங்கம் மக்கள் நலன் சார்ந்து நடக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் போராட்டத்தில் கலந்து கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்…

சட்டத்தரணிகள் சங்கம் தங்களுக்கு ஏற்றவாறு நீதிமன்றங்களை கொண்டு செல்வதற்கே முயற்சிக்கின்றன என முன்னனாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.அரசாங்கம் மக்கள் நலன் சார்ந்து நடக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் போராட்டத்தில் கலந்து கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ந்து பேசிய அவர்,நீதிமன்றத்தை மக்களின் தேவைக்கேற்ப கொண்டு செல்ல அரசாங்கத்திற்கு எமது தரப்பில் இருந்து அழுத்தத்தைக் கொடுப்போம். மக்கள் நலன் சார்ந்த விடயங்கள்அரசாங்கம் கொண்டு வரும் இந்த யோசனை நாடாளுமன்றத்தில் இருந்து நீதிமன்றத்திற்குச் சென்று தீர்ப்பு வரும். இதற்குச் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று தேவையா இல்லையா என்று நீதிமன்றம் கூறினால், அப்போது சர்வஜன வாக்கெடுப்பிற்குச் செல்லலாம். நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் விவகாரம் நாடாளுமன்றத்திற்கும் உயர்நீதிமன்றத்திற்கும் இடையில் தீர்த்துக்கொள்ளப்படும். நாடாளுமன்றத்தில் இப்போது அந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த யோசனையை யார் வேண்டுமானாலும் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தலாம். அதற்குப் பிறகு ஒரு இறுதித் தீர்ப்பு வரும். எனவே, அந்த இறுதித் தீர்ப்பின்படி நாம் செல்லலாம். அதனால் பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படப்போவதில்லை. வாழ்க்கைச் செலவு கடினமாக உள்ளது. அதுதான் எமது இந்த எதிர்ப்பின் தொனிப்பொருளும் கூட வரிகளைக் குறையுங்கள்.நாங்கள் அரசாங்கத்திற்குச் சொல்வது என்னவென்றால், 'மக்கள் பாதையில், மக்கள் நலன் சார்ந்த பாதையில் செல்லுங்கள்' என்பதுதான். இன்று அரசாங்கத்திற்கு எதிராக ஒன்று கூடியுள்ள வலதுசாரிகள் மற்றும் பல்வேறு சக்திகள் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிக்கின்றன. ஆனால் நாங்கள் முயற்சிப்பது அரசாங்கத்தை மக்கள் நலன் சார்ந்த பாதையில் முன்னோக்கி கொண்டு செல்வதற்காகும். இந்த வேறுபாட்டை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.