சேனாநாயக்க சமுத்திரப் பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பது தொடர்பாக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் கள ஆய்வில் ஈடுபட்டு, கடற்றொழில் சங்க பிரதிநிதிகளுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் க…
சேனாநாயக்க சமுத்திரப் பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பது தொடர்பாக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் கள ஆய்வில் ஈடுபட்டு, கடற்றொழில் சங்க பிரதிநிதிகளுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் கடற்றொழிலாளர்களின் கோரிக்கை பல ஆண்டுகளாக நிலவி வரும் நியாயமான பிரச்சினை என்பதை அரசாங்கம் நன்கு உணர்ந்துள்ளது.இது ஒரு சாதாரண நிர்வாகப் பிரச்சினையல்ல.விஞ்ஞான ரீதியாக அணுகப்பட வேண்டிய விடயமாகும்.குறித்த இடத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பது அல்லது கடற்றொழில் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது தொடர்பில் மீன்வளம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.நடவடிக்கைஎனவே கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், மீன்வளப் பாதுகாப்பையும் சமநிலைப்படுத்தும் தீர்வையே அரசாங்கம் முன்னெடுக்கும்.மீன் குஞ்சுகள் மற்றும் இனப்பெருக்கப் பகுதிகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது. அதேவேளை வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும்சம்பந்தப்பட்ட அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களின் பரிந்துரைகளையும் கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மீன்வள வளங்களின் நிலைத்தன்மை மற்றும் கடற்றொழிலாளர்களின் நலன் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் வகையில் நடைமுறைச் சாத்தியமுள்ள தீர்மானமொன்றை விரைவில் எடுக்க அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.


-558592_850x460.jpg)
-558570_850x460.jpg)








