செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனவிழுந்தான் பகுதியில் சனிக்கிழமை (25) அன்று மாலை, காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகச் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மரணமடைந்தவர் 59 வயதுடைய நேரியகுளம் பகுதியைச் சே…

செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனவிழுந்தான் பகுதியில் சனிக்கிழமை (25) அன்று மாலை, காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகச் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மரணமடைந்தவர் 59 வயதுடைய நேரியகுளம் பகுதியைச் சேர்ந்தவராவார்.

மரணமடைந்தவர் ஆனவிழுந்தான் குளக்கட்டுக்கு அருகில் வைத்து இவ்வாறு காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.