நீர்கொழும்பு சிறைச்சாலையில் தொடங்கி நாட்டின் பல சிறைச்சாலைகளுக்கும் பரவியுள்ள பதற்றமான மற்றும் கலவரச் சூழல், தற்போதைய அரசின் முழுமையான நிர்வாகத் தோல்வியையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக வக்கும்புர தெரிவித்த…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தொடங்கி நாட்டின் பல சிறைச்சாலைகளுக்கும் பரவியுள்ள பதற்றமான மற்றும் கலவரச் சூழல், தற்போதைய அரசின் முழுமையான நிர்வாகத் தோல்வியையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று(7) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.எதிர்க்கட்சிகள் மீது பழி அவர் மேலும் தெரிவிக்கையில்,

"தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு முக்கிய துறையைக் கூட முறையாக நிர்வகிக்கத் திறமையற்ற அரசு, எழும் பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகளைக் காண்பதை விடுத்து, வழக்கம்போல் எதிர்க்கட்சிகள் மீது பழிபோடும் போக்கைக் கடைப்பிடிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். சிறைச்சாலைகள் அமைச்சருக்கு எதிராகச் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னணியில், திறமையற்ற ஒரு அமைச்சரைக் காப்பாற்ற முற்பட்டதன் விளைவைத்தான் இன்று ஒட்டுமொத்த நாடும் அனுபவித்து வருகின்றது.பாதாள உலகக் குழுக்கள் சிறைச்சாலைகளுக்குள் அதிகரித்து வரும் பாதாள உலகக் குழுக்களின் சட்டவிரோத ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதன் காரணமாக, சிறைச்சாலைத்துறை அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் மிகுந்த அச்சத்திலும் பாதுகாப்பற்ற சூழலிலும் நாளாந்தம் வாழ்ந்து வருகின்றனர். சிறைக்குள் அரங்கேறும் இத்தகைய துரதிர்ஷ்டவசமான சம்பவங்களை வெளிநாட்டுச் சதி என்றோ அல்லது மற்றவர்கள் மீது வீண்பழி சுமத்தி மூடி மறைத்துவிட முடியாது. இது அரசின் நேரடி இயலாமையையும் நிர்வாகத் திறனின்மையையுமே உலகுக்குப் பறைசாற்றுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.