இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள தொடர் கலவரங்கள் மற்றும் பதற்றமான சூழல் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது. நீர்கொழும்பு, மெகசின், குருவிட்ட மற்றும் பல்லஞ்சேனை போன்ற பல சிறைச்சாலைகளில் கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வன்முறையில் ஈடுபட்டுள்ளனர…
இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள தொடர் கலவரங்கள் மற்றும் பதற்றமான சூழல் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.
நீர்கொழும்பு, மெகசின், குருவிட்ட மற்றும் பல்லஞ்சேனை போன்ற பல சிறைச்சாலைகளில் கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
கைதிகளின் முக்கிய கோரிக்கையாக இருப்பது, தங்களின் வழக்கு விசாரணைகளுக்கான அரச பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவாக தயாரித்து வழங்குவதாகும்.இதில் உள்ள தாமதமே இந்த கலவரங்களுக்கு ஒரு முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இது திட்டமிட்ட சூழ்ச்சியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கைதிகள் அமைதியாக இருக்குமாறும், அறிக்கைகளை விரைவுபடுத்த தேவையான பணியாளர்கள் மற்றும் புதிய இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் அரசன் நாணயக்கார உறுதியளித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, முப்படையினரின் கண்காணிப்பில் சூழல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலவரங்களுக்குப் பின்னால் அரசியல் சூழ்ச்சி இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, 'ஆட்சியை கவிழ்த்து மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான திட்டங்கள் எங்களிடம் உள்ளன' என்று குறிப்பிட்டதையே தற்போதைய குழப்பங்களுக்குத் தொடக்கமாகப் பலர் கருதுகின்றனர்.
மேலும், அரசாங்கத்தின் மீதான சட்ட ஒழுங்கு குறித்து சர்வதேச மட்டத்தில் அவப்பெயரை ஏற்படுத்தவும், தற்போதைய அரசை வீழ்த்தவும் இத்தகைய கலவரங்கள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது NewsInsightTamil நிகழ்ச்சி...












