போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முடக்குவதற்காக, சிறைக்குள் இருக்கும் கைதிகளை தூண்டிவிட்டு வன்முறையை ஏற்படுத்த சிலர் முயல்வதாக பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (08.08.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த வ…

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முடக்குவதற்காக, சிறைக்குள் இருக்கும் கைதிகளை தூண்டிவிட்டு வன்முறையை ஏற்படுத்த சிலர் முயல்வதாக பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (08.08.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சிறைச்சாலை வன்முறை மற்றும் அரசாங்க நடவடிக்கை நாட்டில் சமீபத்தில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட வன்முறைகள் மற்றும் அசாதாரண சூழ்நிலைகள் குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.போதைப்பொருள் கடத்தலுக்கான மத்தியஸ்த நிலையம்

கடந்த காலங்களில் இலங்கை போதைப்பொருள் கடத்தலுக்கான ஒரு முக்கிய மத்தியஸ்த நிலையமாக விளங்கியது.

தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு, போதைப்பொருளை முழுமையாக ஒழிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் சில அரசியல்வாதிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது தற்போதைய சம்பவங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.வன்முறையை ஏற்படுத்தும் முயற்சி போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முடக்குவதற்காக, சிறைக்குள் இருக்கும் கைதிகளை தூண்டிவிட்டு வன்முறையை ஏற்படுத்த சிலர் முயல்கின்றனர்.

சூழ்நிலையைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் உயர்மட்ட சந்திப்பு நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்று அவசர கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர்.

சிறைச்சாலை அமைதியின்மைகளை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், நாட்டின் அமைதியை குலைக்க முயலும் நபர்களுக்கு எதிராக மிக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.