2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 14ஆம் திகதி, செஞ்சோலை சிறுமிகள் இல்ல வளாகத்தின் மீது நடத்தப்பட்ட வான்படைத் தாக்குதலில் 61ற்கும் மேற்பட்ட மாணவிகள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர். அந்தக் காலகட்டத்தில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும், கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் ப…
2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 14ஆம் திகதி, செஞ்சோலை சிறுமிகள் இல்ல வளாகத்தின் மீது நடத்தப்பட்ட வான்படைத் தாக்குதலில் 61ற்கும் மேற்பட்ட மாணவிகள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர்.
அந்தக் காலகட்டத்தில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும், கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் பதவி வகித்தனர்.
செஞ்சோலை தாக்குதல் தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள், சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர்கள் வெளியிட்ட அறிக்கைகளில், இலங்கை வான்படையின் தாக்குதலில் சிறுவர்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், செஞ்சோலை வளாகம் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் என இலங்கை அரசாங்கம் அப்போது விளக்கம் அளித்திருந்தது.
ஆனால், தாக்குதலுக்குப் பின்னர் வெளியான புகைப்படங்களில், சிறுவயதுடைய மாணவிகள் சீருடைகளுடன் காணப்பட்டமை தொடர்பிலும் பல்வேறு தரப்பினரால் கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில், சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும் அவருக்கு ஆதரவாக செயற்பட்டவர்களுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபோன்ற சூழலில், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கடந்தகால குற்றங்கள் மற்றும் அநீதிகளுக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு தமிழ் சமூகத்திலும் நிலவி வருகிறது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாட்டு மக்களின் நலனுக்காகவும் ஊழலற்ற நிர்வாகத்தை முன்னெடுப்பதற்காகவும் செயற்படுவதாகத் தெரிவித்து வருகிறார்.
இவ்வாறான அரசியல் மாற்றங்கள், கடந்த காலங்களில் இடம்பெற்ற அநீதிகளுக்கு தீர்வைப் பெற்றுத்தருமா என்ற எதிர்பார்ப்பு இளைஞர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாகப் பேசுகிறது ‘செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...












