தமிழ்நாட்டின் கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 58 வயது பெண் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பாப்பநாயக்கன்பாளையம் கருப்பக்கல் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (58). இவருக்கு ராஜா…

தமிழ்நாட்டின் கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 58 வயது பெண் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பாப்பநாயக்கன்பாளையம் கருப்பக்கல் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (58). இவருக்கு ராஜா (35) என்ற மகனும், அமுதா (30) என்ற மகளும் உள்ளனர். அமுதா தனது குடும்பத்துடன் பாலக்காட்டில் வசித்து வருகிறார்.வீட்டில் தனியாக இருந்தபோதுராஜா மட்டும் சாந்தியுடன் வசித்து வந்தார்.

சாந்தி, அப்பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவரின் வீட்டில் சமையல் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.கொலை

கடந்த 11-ஆம் திகதி இரவு சாந்தி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அவரை தாக்கியதில் சாந்தி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். கொலையாளியை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை பொலிஸார் சாந்தியின் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சம்பவம் நடந்த நேரத்தில் ஒருவர் மட்டும் சாந்தியின் வீட்டுக்குள் சென்று பின்னர் வெளியே வரும் காட்சி பதிவாகியிருந்தது.கண்காணிப்பு (cctv) கேமரா காட்சிகளின் அடிப்படையில் பொலிஸார் அந்த நபர் குறித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அதே பகுதியில் சுற்றித்திரியும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை பொலிஸார் சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், சாந்தி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து சிறுவன் வீட்டுக்குள் சென்றதாகவும், அங்கிருந்து செல்போனை திருட முயன்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது சாந்தி அதை பார்த்ததால், சிறுவன் கட்டையால் அவரை தாக்கியதாகவும், பின்னர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். இதில் படுகாயமடைந்த சாந்தி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக கிடைத்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.