முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உண்மைகள் எதனையும் மனுதாரரான சுரேஷ் சலே நீதிமன்றில் சமர்ப்பிக்காமல் மறைத்துள்ளார் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். பேராணை மனுவொன்றின் மூலம் நிவாரணம் பெற வேண்டுமாயின் அனைத்து உண்மைகளையும் நீதிமன்…
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உண்மைகள் எதனையும் மனுதாரரான சுரேஷ் சலே நீதிமன்றில் சமர்ப்பிக்காமல் மறைத்துள்ளார் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். பேராணை மனுவொன்றின் மூலம் நிவாரணம் பெற வேண்டுமாயின் அனைத்து உண்மைகளையும் நீதிமன்றில் வெளிப்படுத்த வேண்டும். அவர் தூய்மையான கரங்களுடன் நீதிமன்றத்திற்கு வரவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் ரிட் மனுவை சட்டத்தின் முன் எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல முடியும்? என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், மன்றில் கேள்வியெழுப்பியுள்ளார். சாரா ஜாஸ்மின் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைதுசெய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு மேல்முறையீட்டு நீதிமன்றில் நேற்று(28) மீண்டும் பரிசீலிக்கப்பட்டது.
மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹான்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் மன்றில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், 'உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு மனுதாரரான சுரேஷ் சலே எவ்வாறு இடையூறு விளைவித்தார் என்பது குறித்து, அன்றைய காலகட்டத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய பிரசாத் ரணசிங்க வழங்கிய வாக்குமூலத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 'சாரா ஜாஸ்மின்' என்ற பெண் உயிரிழக்கவில்லை என்றும், அவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்றும் பேச்சுக்கள் எழுந்தன. சுரேஷ் சலேவின் நிலைப்பாடுஇது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சரியாக விசாரணை நடத்தவில்லை என சுரேஷ் சாலே விசாரணைப் மீளாய்வுக் கூட்டங்களில் குற்றஞ்சாட்டிப் பேசினார்.சாரா ஜாஸ்மின் அந்த இடத்திலேயே உயிரிழந்தார் என்றும், DNA பரிசோதனைகள் சரியாக நடத்தப்படவில்லை என்றும் சுரேஷ் சலே பல சந்தர்ப்பங்களில் குற்றஞ்சாட்டியதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார். டி.என்.எ பரிசோதனையை மீண்டும் நடத்த வேண்டும் என்பதே சுரேஷ் சலேவின் நிலைப்பாடாக இருந்ததுடன், அன்றைய ஜனாதிபதி மூலம் அந்தப் பணியை அவர் நிறைவேற்றிக் கொண்டார் என்பதும் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வாக்குமூலத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.












