பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் அசாதாரண வெப்பநிலை மாற்றங்களால் உருவாகும் 'சூப்பர் எல் நினோ' வானிலை மாற்றம் காரணமாக, ஆப்பிரிக்க நாடுகள் சுமார் 10 பில்லியன் முதல் 20 பில்லியன் டொலர் வரை பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடும் என ஆப்பிரிக்க அபிவிருத்தி வங்கியின் காலநிலை மாற்றப் பி…

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் அசாதாரண வெப்பநிலை மாற்றங்களால் உருவாகும் 'சூப்பர் எல் நினோ' வானிலை மாற்றம் காரணமாக, ஆப்பிரிக்க நாடுகள் சுமார் 10 பில்லியன் முதல் 20 பில்லியன் டொலர் வரை பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடும் என ஆப்பிரிக்க அபிவிருத்தி வங்கியின் காலநிலை மாற்றப் பிரிவு இயக்குநர் ஆண்டனி நியோங் எச்சரித்துள்ளார்.

இந்த தீவிர வானிலை மாற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்படும் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சராசரியாக 1% முதல் 2% வரை குறையக்கூடும் என ஆப்பிரிக்க அபிவிருத்தி வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. வரவிருக்கும் காலநிலை பாதிப்புகளை எதிர்கொள்ள ஆப்பிரிக்காவுக்கு இந்த ஆண்டு காலநிலை தழுவல் நிதியாக சுமார் 100 பில்லியன் டொலர் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.மக்கள் இடம்பெயரும் சூழல் உருவாகலாம் வறட்சி மற்றும் கடல் வெப்பநிலை உயர்வால் விவசாயிகளுக்கு சுமார் 330 மில்லியன் டொலர் வருமான இழப்பும், மீன்பிடித் துறையில் 1% முதல் 4% வரை உற்பத்திக் குறைவும் ஏற்படும் என ஆப்பிரிக்க அபிவிருத்தி வங்கி கணித்துள்ளது. உணவு மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக சூடான், தெற்கு சூடான், கொங்கோ, சோமாலியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து மக்கள் பெருமளவில் இடம்பெயரும் சூழல் உருவாகலாம்.

ஆப்பிரிக்க நாடுகளின் முக்கிய உணவான சோளத்தின் விலை இருமடங்காக உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.