இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசிய காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும், கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் தொகுதி பிரதிநிதியும், இந்திய நாடாளுமன்ற வெளிநாட்டு விவகாரங்களுக்கான நிலைக்குழுவின் தலைவருமான டாக்டர் சஷி தரூரை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா.)…
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசிய காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும், கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் தொகுதி பிரதிநிதியும், இந்திய நாடாளுமன்ற வெளிநாட்டு விவகாரங்களுக்கான நிலைக்குழுவின் தலைவருமான டாக்டர் சஷி தரூரை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா.) பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் சனிக்கிழமை (25) அன்று சந்தித்தார்.
இதன்போது, இலங்கையின் பொருளாதார மீட்சிப் பயணம் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இருவரும் விரிவாகக் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
அத்துடன், அண்மையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் பேரவையின் நோக்கங்கள், பணிப்பரப்பு மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் ஜீவன் தொண்டமான், டாக்டர் சஷி தரூருக்கு விளக்கமளித்தார்.
சந்திப்பின் நிறைவாக, இலங்கையின் செழுமையான கலை மரபைப் பிரதிபலிக்கும் வகையில், ஓவியர் ராஜ சேகர் வரைந்த அசல் ஓவியமான 'The Knife Sharpener' நினைவுப் பரிசாக டாக்டர் சஷி தரூருக்கு ஜீவன் தொண்டமான் வழங்கினார்.







-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)
-558066_850x460.jpg)
