டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புதிய சமூக வலுவூட்டல் முன்னோடித் திட்டமொன்றை சுகாதார அமைச்சு ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் சமூக அதிகாரமளித்தலை வலுப்படுத்தும் வகையில் தகவல் தொடர்பு மற்…
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புதிய சமூக வலுவூட்டல் முன்னோடித் திட்டமொன்றை சுகாதார அமைச்சு ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் சமூக அதிகாரமளித்தலை வலுப்படுத்தும் வகையில் தகவல் தொடர்பு மற்றும் நடத்தை மாற்ற அணுகுமுறைகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதற்கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட சில சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
பொதுமக்களிடையே டெங்கு தடுப்பு தொடர்பான பழக்கவழக்கங்களில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், தற்போதுள்ள டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் செயல்திறனை அதிகரிப்பதற்கான புதிய வழிமுறைகளை கண்டறிவதே இதன் பிரதான நோக்கமாகும்.
இதன் ஒரு பகுதியாக, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களின் பங்களிப்பை மேலும் அதிகரிப்பதற்கான வழிமுறைகளை அடையாளம் காண நடத்தை மாற்றம் தொடர்பான கணக்கெடுப்பொன்றும் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னோடித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாளை (21) காலை 9.00 மணிக்கு பொரலஸ்கமுவ சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டெங்கு கட்டுப்பாட்டில் சமூகங்களின் தொடர்ச்சியான பங்களிப்பு அத்தியாவசியமானது என சுகாதாரத் துறை வலியுறுத்தி வரும் நிலையில், இந்தப் புதிய அணுகுமுறை பொதுமக்களை டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் மேலும் தீவிரமாக ஈடுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026ஆம் ஆண்டில் இலங்கையில் டெங்கு பரவல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ள நிலையில், சமூக ஈடுபாடு, நடத்தை மாற்றம் மற்றும் ஆபத்து தொடர்பாடலை வலுப்படுத்துவது எதிர்கால டெங்கு கட்டுப்பாட்டுக்கான முக்கிய முன்னுரிமைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.












