சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.இலங்கை நிர்வாக சேவை தரம் 2 இல் உள்ளவர்கள் வீட்டில் இருந்து பணியிடத்திற்குச் செல்வதற்கு தனிப்பட்ட ர…

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.இலங்கை நிர்வாக சேவை தரம் 2 இல் உள்ளவர்கள் வீட்டில் இருந்து பணியிடத்திற்குச் செல்வதற்கு தனிப்பட்ட ரீதியில் அரச வாகனங்களை பயன்படுத்த முடியாது என நிர்வாக அதிகாரிகளுக்கான தாபன விதிக்கோவையில் சொல்லப்பட்டுள்ளது.அதிகாரிகளுக்கான தாபன விதிக்கோவை அத்துடன் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நிர்வாக சேவை அதிகாரிகள் இணைந்து நாளொன்றுக்கு 50KMக்கு உட்பட்டு பயன்படுத்தலாம் எனவும் குறித்த விதிக்கோவையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முரணாக சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி சபை அனுமதித்தால் தான் வாகனம் பயன்படுத்தலாம் என அறிவுறுத்தியுள்ளார்.

இதன்போது உறுப்பினர்களால் குறித்த தீர்மானம் தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவித்து அவரது அனுதியின் பின்னரே வாகனத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் நகரசபையின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவிக்காமல் தினமும் YY 3619 இலக்கமுடைய நகரசபையின் முச்சக்கரவண்டியில் சாவகச்சேரி நகரசபை எல்லை தாண்டி சாவகச்சேரி பிரதேச சபையின் எல்லை தாண்டியும் வலிகாமம் - கிழக்கு பிரதேச சபைக்குள் உரும்பிராய் வரையும் தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு தடவைகள் சுமார் 80KM வரை பயணித்துள்ளார்.அதிகாரத்தை தவறாக பயன்படுத்தல் அத்துடன் வாகனப் போக்குவரத்து பதிவேடுகளில் தினமும் இரண்டு தடவைகள் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் இருந்து உரும்பிராய் சென்று வருகின்றமை தொடர்பில் பதிவு செய்யாமல் நகரசபை எல்லைக்குள் பல தடவைகள் பயணித்தமையும் எரிபொருள் நிரப்பியுள்ளமையும் தெரியவந்துள்ளது.இதேவேளை நகரசபையின் தவிசாளர் தனது அலுவலக கடமைகளுக்கு கூட இதுவரை தனது சொந்த வாகனத்தினையே பயன்படுத்தி வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சபையின் செயலாளர் அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்துகின்றார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. சாவகச்சேரி நகராட்சி மன்றில் இதுவரை செயலாளர்களாக கடமையாற்றியவர்கள் தூர இடங்களில் இருந்தாலும் தமது சொந்த வாகனங்களிலேயே அலுவலகத்துக்கு வந்துள்ளதோடு அலுவலக கடமைகளுக்கு மட்டுமே சபையின் வாகனங்களை பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.